விளையாட்டுத் துறைக்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்

விளையாட்டுத் துறைக்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்

நாட்டின் விளையாட்டுத் துறையில் நீண்டகாலமாக உள்ள தவறான நடத்தைகளை தடுக்கும் நோக்கில் இளைஞர் மற்றம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , சிறப்பு புலனாய்வுப் பிரிவொன்றை நியமித்துள்ளார் .

இந்த பிரிவு , விளையாட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு , போட்டி நிர்ணயம் மற்றும் ஊழல் போன்றவற்றை கண்காணிக்கும் .

இலங்கை கிரிக்கெட் அணி குறித்து மிக்கி ஆர்தர் விரிவாக ஆராய வேண்டும் என்கிறார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணி குறித்து மிக்கி ஆர்தர் விரிவாக ஆராய வேண்டும் என்கிறார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணி குறித்து விரிவாக ஆராய வேண்டிய நிலை தலைமை பயிற்றுநரான மிக்கி ஆர்தருக்கு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார்.

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதன் பின்னர் அவர் இதனைக் கூறினார்.

2019 ஆம் ஆண்டு தசுன் சானக்க தலைமையில் பாகிஸ்தானில் இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடருக்கு பின்னர் இலங்கை அணி தொடர்ச்சியாக நான்கு தொடர்களில் தோல்வியடைந்துள்ளது.

இந்த வரலாற்றை குசல் ஜனித் பெரேரா தலைமையிலான இலங்கை குழாம் இங்கிலாந்தில் மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை.

தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட்களால் வெற்றியீட்டியதுடன், இரண்டாவது போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றியீட்டி தொடரை தன்வசப்படுத்தியது.

(26) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 85 ஓட்டங்களால் வெற்றியீட்டி இருபதுக்கு 20 தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

மூன்றாவது போட்டியில் 181 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலளித்தாடிய இலங்கை அணியின் 8 துடுப்பாட்ட வீரர்களால் 10 ஓட்டங்களையேனும் கடக்க முடியவில்லை.

போட்டியில் இலங்கை அணி பெற்ற 91 ஓட்டங்களில் 16 உதிரி ஓட்டங்கள் உள்ளடங்குகின்றன.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடர் தோல்விக்கு பின்னர் அத்தொடரில் விளையாடிய மூன்று வீரர்களை அணயில் இருந்து நீக்கிய தேசிய கிரிக்கெட் தெரிவுக்குழு எதிர்வரும் உலகக்கிண்ண இருபதுக்கு 20 தொடரை இலக்காகக் கொண்டு குசல் ஜனித் பெரேரா தலைமையிலான குழாமை பங்களாதேஷ் தொடருக்கு பெயரிட்டது.

இலங்கை அணியின் பணிப்பாளராக செயற்படும் அவுஸ்திரேலியாவின் டொம் மூடி, பிரதான பயிற்றுநரான மிக்கி ஆர்த்தர், துடுப்பாட்ட பயிற்றுநரான கிரேண்ட் ப்ளவர் உள்ளிட்ட வௌிநாட்டு நிபுணர்களின் ஒத்துழைப்பை பெறும் இலங்கை அணி, 35 வருட கிரிக்கெட் வரலாற்றில் பெருந்தோல்வியை சந்தித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார தெரிவித்ததாவது,

திறமைகளை வேகமாக வளர்த்துக்கொள்ள சந்தர்ப்பம் உள்ளது. எனினும், அதற்கான மனநிலையை வளர்த்துக்கொள்வதே சிரமமான காரியம். அதனையே வேகமாக மேற்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். சர்வதேச மட்டத்தில் விளையாடும் போது முதல்தர தொடர்களைப் போல செயற்பட முடியாது. 19 வயதிற்குட்பட்ட மற்றும் கழக மட்ட தொடர்களில் அதற்கான திறனை வளர்த்துக்கொண்டிருக்க வேண்டும். கடந்த மூன்று வருடங்களாக காணப்படும் இந்த பின்னடைவு, இந்த தொடரில் அதிகளவு வெளிப்பட்டிருந்தது. வீரர்கள் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடினார்கள். எனினும், பந்து மட்டையில் படவில்லை.. எனவே பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய நிலை மிக்கி ஆர்த்தருக்கு ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை: செரீனா வில்லியம்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை: செரீனா வில்லியம்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

தாம் ஒலிம்பிக் பட்டியலில் இல்லையெனவும் அது தமக்குத் தெரியாத நிலையில், தாம் அதில் கலந்துகொள்வது முறையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

அவரது முடிவு குறித்து விபரமாக வினவ முற்பட்ட போது, அது குறித்து பேச செரீனா வில்லியம்ஸ் விரும்பவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

போட்டி விதிமுறைகளுக்கு அமைய, தமது 3 வயது குழந்தையை அழைத்துச் செல்ல முடியாதென்பதால், தாம் டோக்கியோவிற்கு செல்லப்போவதில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

2000 ஆம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் அறிமுகம் பெற்ற அமெரிக்க டென்னிஸ் நட்சத்திரமான 39 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை நான்கு தடவைகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

23 கிரான்ட்ஸ்லாம் பட்டங்களையும் அவர் வெற்றி கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ்: ஃபேபியோ குவார்டாரோ முதலிடம்!

டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ்: ஃபேபியோ குவார்டாரோ முதலிடம்!

டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், யமஹா அணியின் வீரரான ஃபேபியோ குவார்டாரோ முதலிடம் பிடித்துள்ளார்.

இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும்.

அந்த வகையில் ஆண்டின் ஒன்பதாவது சுற்றான டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று டிடி எஸ்சென் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது.

இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சீறிபாய்ந்தனர்.
இதில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ, பந்தய தூரத்தை 40 நிமிடங்கள், 35.031 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். அத்தோடு முதலிடத்திற்கான 25 புள்ளிகளையும் அவர் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, யமஹா அணியின் மற்றொரு வீரரான மேவரிக் வினேல்ஸ், 2.757 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து இரண்டாவது இடத்தை பிடித்ததோடு, அதற்கான 20 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டார்.

இவரையடுத்து, சூசுக்கி அணியின் ஜோன் மிர், 5.760 வினாடிகள் பின்னிலையில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார். அதற்கான 16 புள்ளிகளையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஒன்பது சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில், யமஹா அணியின் ஃபேபியோ குவார்டாரோ நான்கு வெற்றிகளுடன் 156 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

டுகார்டி அணியின் ஜோஹன் சார்கோ, 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் டுகார்டி அணியின் மற்றொரு வீரரான பிரான்செஸ்கோ பாக்னெயா 109 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

பத்தாவது சுற்றான ஸ்டைரியா கிராண்ட் பிரிக்ஸ், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி ரெட் புல் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை – இங்கிலாந்து தொடரின் போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19

இலங்கை – இங்கிலாந்து தொடரின் போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடருக்கு போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட, பில் விட்டிகேஸிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று T20I போட்டிகளுக்கும், போட்டி மத்தியஸ்தராக பில் விட்டிகேஸ் செயற்பட்டிருந்தார். எனினும், தற்போது அறிகுறியற்ற கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் 10 நாட்கள் தனிமைப்படத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டள்ள போதும், இதன் காரணமாக நாளை (29) நடைபெறவுள்ள முதல் ஒருநாள் போட்டிக்கு எந்த இடையூறுகளும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், போட்டி மத்தியஸ்தருடன் நெருங்கிய தொடர்புக்கொண்ட 7 ஏனைய போட்டி அதிகாரிகளும் எதிர்வரும் 7ம் திகதிவரை தனிமைப்படுத்தலில் வைக்கப்படவுள்ளனர். இதில், 2 போட்டி அதிகாரிகள் முதல் ஒருநாள் போட்டியில் கடமையாற்றவிருந்தனர்.

போட்டி அதிகாரிகள் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்றாலும், இரண்டு அணியின் வீரர்களுக்கும் இதனால், எந்த பாதிப்பும் கிடையாது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என இலங்கை அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்தநிலையில், ஐசிசி சுப்பர் லீக்கிற்கான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளைய தினம் (29) ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நடப்புச் சம்பியனை வீழ்த்திய பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு காலிறுதியில்

நடப்புச் சம்பியனை வீழ்த்திய பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு காலிறுதியில்

யூரோ 2020 கால்பந்து தொடரில் தோல்வி காணாத டென்மார்க்கை வீழ்த்திய செக் குடியரசும், விறுவிறுப்பான போட்டியில் நடப்புச் சம்பியன் போர்த்துக்கல் அணியை வீழ்த்திய பெல்ஜியமும் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

குறித்த இரண்டு போட்டிகளினதும் விபரம் கீழே.

#நெதர்லாந்து எதிர் #செக்_குடியரசு

ஹங்கேரி தலைநகர் படபெஸ்டில் உள்ள Puskás அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற 16 அணிகள் சுற்றுக்கான இந்தப் போட்டியில், லீக் சுற்றில் C குழுவில் முதலிடம் பிடித்த நெதர்லாந்தும் D குழுவில் மூன்றாம் இடம் பிடித்த செக் குடியரசும் மோதின.

போட்டியின் முதல் பாதியில் இரண்டு அணிகளும் சம பலத்துடன மோதியதன் காரணமாக குறித்த பாதியில் இரண்டு அணிகளாலும் கோல்கள் எதனையும் பெற முடியாமல் போனது.

எனினும், பந்தை கையால் வேண்டும் என்றே பிடித்தமைக்காக போட்டியின் 54ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் De Ligt சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதன்போது VAR முறையினாலேயே அவரது பிழை கண்டறியப்பட்டது.

எனவே, 10 வீரர்களுக்கு எதிராக விளையாடிய செக் குடியரசு அணி வீரர்கள் போட்டியை முழுமையாக தமது பக்கம் திருப்பினர்.

ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் திசையில் கிடைத்த பிரீ கிக்கின்போது உள்வந்த பந்தை செக் குடியரசு வீரர் Kalas கோலின் இடது பக்க கம்பத்தில் இருந்து ஹெடர் செய்ய, மீண்டும் அதனை சக அணி வீரர் Holes ஹெடர் மூலம் கோலாக்கினார்.

அடுத்த 12 நிமிடங்களில் தமது பகுதியில் இருந்து வழங்கப்பட்ட ப்ரீ கிக் பந்தினை Holes முன்னோக்கி எடுத்துச் சென்று பரிமாற்றம் செய்ய, அதனை Schick, செக் குடியரசு அணிக்கான அடுத்த கோலாக மாற்றினார்.

இதனால், போட்டி நிறைவில் 2 – 0 என வெற்றி பெற்ற செக் குடியரசு காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியது. லீக் சுற்றில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காது நொக் அவுட் சுற்றுக்கு வந்த நெதர்லாந்து அணிக்கு, இது முதல் தோல்வியாக, அமைய, அவ்வணி யூரோ 2020 தொடரில் இருந்து வெளியேறியது.

முழு நேரம்: நெதர்லாந்து 0 – 2 செக் குடியரசு

கோல் பெற்றவர்கள்
செக் குடியரசு – Holes 68′, Schick 80′

#பெல்ஜியம் எதிர் #போர்த்துக்கல்

லீக் சுற்றில் B குழுவில் முதலிடம் பிடித்த பெல்ஜியம் அணி, ஸ்பெயின் La Cartuja அரங்கில் 28ஆம் திகதி நள்ளிரவு (இலங்கை நேரம்) இடம்பெற்ற இந்தப் போட்டியில் E குழுவில் மூன்றாம் இடம் பிடித்த போர்த்துக்கல் அணியை எதிர்கொண்டது.

போர்த்துக்கல் அணிக்கு கிடைத்த பிரீ கிக்கின்போது ரொனால்டோ உதைந்த பந்தை பெல்ஜியம் கோல் காப்பாளர் Courtois தடுத்தார். இது போர்த்துக்கல் அணிக்கு முதல் பாதியில் கோலுக்காக கிடைத்த சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

போட்டியின் 42ஆவது நிமிடத்தில் பெல்ஜிய வீரர் Meunier வழங்கிய பந்தின்மூலம் தோர்கன் ஹசார்ட் யூரோ நடப்புச் சம்பியன் போர்த்துக்கல் அணிக்கு எதிராக, போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தார்.

ஆட்டத்தின் 80 நிமிடங்கள் கடந்த நிலையில் போர்த்துக்கல் அணிக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை ரூபன் டயஸ் கோலுக்குள் ஹெடர் செய்தார். எனினும் பந்தை Courtois தனது கைகளால் தடுத்தார்.

அடுத்த நிமிடம் போர்த்துக்கல் வீரர் Guerreiro கோல் எல்லைக்கு வெளியில் இருந்து கோல் நோக்கி உதைந்த பந்து கோலின் வலது பக்க கம்பத்தில் பட்டு மிண்டும் மைதானத்திற்குள் வந்தது.

அதன் பின்னரும் போர்த்துக்கல் வீரர்கள் அடுத்தடுத்து கோலுக்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டாலும் அவற்றை பெல்ஜியம் பின்கள வீரர்கள் தடுத்தனர்.

எனவே, போட்டி நிறைவில் தோகன் ஹசார்ட் பெற்ற ஒரே கோலினால் பிபா தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் பெல்ஜியம், யூரோ நடப்புச் சம்பியன் போர்த்துக்கலை 1-0 என வீழ்த்தி, தோல்வி காணாத அணியாக தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதன்படி, பெல்ஜியம் அணி, காலிறுதியில் இத்தாலியை சந்திக்கவுள்ளது.

முழு நேரம்: பெல்ஜியம் 1 – 0 போர்த்துக்கல்

கோல் பெற்றவர்கள்
பெல்ஜியம் – Thorgan Hazard 42′

அநாகரீகமாக நடந்துகொண்ட குசல், நிரோஷன் திக்வெல்ல, கிரிக்கெட் சபை அதிரடித் தீர்மானம்..!

அநாகரீகமாக நடந்துகொண்ட குசல், நிரோஷன் திக்வெல்ல, கிரிக்கெட் சபை அதிரடித் தீர்மானம்..!

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை உடனடியாக நாட்டிற்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இருபதுக்கு-20 தொடரின் மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது.

இந்த விடயம் இலங்கை கிரிகெட் ரசிகர்களை மிகுந்த கவலைக்கும், கோபத்துக்கும் உள்ளாகியுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களும் தற்போதைய இலங்கை அணியின் நிலைமை குறித்து விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் வீரர்களான குசல் மென்டிஸ் மற்றும் திக்வெல்ல அகியோர் இங்கிலாந்தின் டர்ஹம் நகரத்தில் புகைபிடிக்க தயாராவதும் தப்பித்து ஓட முயல்வதும் போன்ற காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

தொடர் தோல்விகள் பற்றி எந்தவித கவலையும் இன்றி இப்படி சுற்றுப் பயணங்களின் போது பொது இடங்களில் அநாகரீகமாக நடந்துகொள்ளும் வீரர்களை அணியிலிருந்து நீக்க வேண்டுமென இரசிகர்கள் தம் எதிர்ப்பை தெரித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்ற நிலையில், குறித்த இரு வீரர்களையும் உடனடியாக நாட்டிற்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டோக்கியோ ஒலிம்பிக் ; இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்

டோக்கியோ ஒலிம்பிக் ; இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்

கொவிட் -19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் , ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

தற்போது அனைத்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புறப்படுவதற்கு நான்கு நாள் காலகட்டத்தில் இரண்டு முறை கொரோனா வைரஸ் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் .

இந் நிலையில் இந்தியா , மாலைத்தீவு , நேபாளம் , பாகிஸ்தான் , இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு ஜூலை 1 ஆம் திகதி முதல் புதிய விதிகள் அமுல்படுத்தப்படும் .

அதற்கு அமைவாக ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் குறித்த நாடுகளைச் சேர்ந்தோர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

ஜப்பானிய ஒலிம்பிக் அமைச்சர் தமயோ மருகாவா வெள்ளிக்கிழமை , உகாண்டா ஒலிம்பிக் அணியின் உறுப்பினர் ஒருவர் நாட்டுக்கு வந்தவுடன் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தவர் டெல்டா மாறுபாட்டைக் கொண்டிருப்பதாகக் கூறியமையும் குறிப்பிடத்தக்கது .

ரொமேலுவின் பெல்ஜியமும் ரொனால்டோவின் போர்த்துக்கல்லும் இன்று பலப்பரீட்சை

ரொமேலுவின் பெல்ஜியமும் ரொனால்டோவின் போர்த்துக்கல்லும் இன்று பலப்பரீட்சை

ஐரோப்பிய கால்பந்தாட்ட அரங்கில் அதிபலம்வாய்ந்த அணிகளாக வருணிக்கப்படும் பெல்ஜியமும் போர்த்துக்கலும் இன்று நடைபெறவுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் நொக் அவுட் போட்டியில் மோதவுள்ளன .

அத்துடன் சமபலம் வாய்ந்த நெதர்லாந்தும் செக் குடியரசும் மற்றொரு நொக் அவுட் போட்டியில் இன்று சந்திக்கவுள்ளன .

பெல்ஜியத்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையிலான போட்டி ஐரோப்பாவின் அதி சிறந்த வீரர்களும் இந்த இரண்டு அணிகளதும் தலைவர்களுமான லூக்காக்கு ரொமேலுவுக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் இடையிலான போட்டியாகவும் அமையும் என்று கூறினால் மிகையாகாது .

உள்ள 10 ர் கால்பந்தாட்ட அரங்கில் ( இத்தாலி செரி ஏ ) எதிரெதிர் அணிகளில் சந்தித்துவந்துள்ள இவர்கள் இருவரும் இன்றைய தினம் சர்வதேச அரங்கில் தங்களுக்கு இடையிலான போட்டித்தன்மையை பரீட்சிக்கவுள்ளனர் .

நடப்பு ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் 5 கோல்களுடன் அதிக கோல்களை ரொனால்டோ போட்டுள்ளதுடன் ரொமேலு 3 கோல்களைப் போட்டுள்ளார் .

இன்றைய போட்டியில் ரொனால்டோ மேலும் ஒரு கோலை போட்டால் சர்வதேச அரங்கில் அதிக கோல்கள் போட்டவருக்கான சாதனைக்கு சொந்தக்காரராவார் .

ஈரானின் முன்னாள் வீரர் அலி தாய் போட்டுள்ள 109 கோல்களை ரோனால்டோ கடந்த போட்டியில் 2 கோல்களைப் போட்டதன் மூலம் சமப்படுத்தியிருந்தார் .

கடந்த செரி ஏ பருவகாலத்தில் ஜுவென்டஸ் அணிக்காக ரொனால்டோ 29 கோல்களைப் போட்டு தங்கப் பாதணிக்கு சொந்தக்காரரானார் .

ரொனால்டோவைவிட 5 கோல்கள் குறைவாக போட்டிருந்த ரொமேலு , செரி ஏ போட்டியில் இன்டர் மிலான் அணியை சம்பியனாக்கியதால் அதி சிறந்த வீரரு h க்கான விருதை தனதாக்கிக்கொண்டிருந்தார் .

இவர்கள் இருவரினதும் தலமையிலான அணிகளில் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் இடம்பெறுவதால் நடுநிலையான செவில் , டி லா கார்ட்டூயா விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி கடைசிவரை வேகமும் விறுவிறுப்பும் கலந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

#நெதர்லாந்து எதிர் #செக்_குடியரசு

நெதர்லாந்துக்கும் செக் குடியரசுக்கும் இடையிலான நொக் அவுட் போட்டி நடுநிலையான புடாபெஸ்ட் , பெரென்க் புஸ்காஸ் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது .

இந்த இரண்டு அணிகளில் லீக் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றியீட்டிய நெதர்லாந்து இன்றைய போட்டியில் வெற்றிபெறக்கூடிய அனுகூலமான அணியாகத் தென்படுகின்றது .

எனினும் செக் குடியரசை குறைத்து மதிப்பிட முடியாது .

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றுகளில் சந்தித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் செக் குடியரசே வெற்றிபெற்றிருந்தது .

எனவே இன்றைய போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற நிலைப்பாடே காணப்படுகின்றது .

இங்கிலாந்துடனான தொடர் இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராவதற்கு உதவும் – பாபர் அஸாம்

இங்கிலாந்துடனான தொடர் இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராவதற்கு உதவும் – பாபர் அஸாம்

ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் பெரிதும் உதவும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார் .

இங்கிலாந்தை பாகிஸ்தான் அணி சென்றடைந்து டார்பியில் 3 நாள் தனிமைப்படுத்தலை ஆரம்பிக்கத் தயாரானபோது பாபர் அஸாம் இதனைத் தெரிவித்தார் .

இங்கிலாந்தை சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்றுநர் குழாம் உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனை எதிர்மறையாக இருந்ததாக அறிவிக்கப்படுகின்றது .

இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவற்றில் விளையாடவுள்ள பாகிஸ்தான் அணி , தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்தபின்னர் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பிக்கும் .

டார்பியில் 6 நாள் பயிற்சியில் ஈடுபடும் பாகிஸ்தான் அணியினர் அதன் எனர் கார்டிவ் பயணமாகி அங்கு ஜூலை 8 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்தாடும் .

இதற்கு முன்னர் இங்கிலாந்துக்கான விஜயங்களின்போது தமது அணி திறமையாக விளையாடியதை நினைவுபடுத்திய பாபர் அஸாம் , அதற்காக இங்கிலாந்தை இலகுவாக கருதிவிடக்கூடாது என தனது அணியினருக்கு எச்சரித்துள்ளார் . ‘ இங்கிலாந்து அணியினரை அவர்களது சொந்த மண்ணில் இலகுவாக கருதமுடியாது .

எவ்வாறாயினும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர் இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராவதற்கான தொடராக அமையும் ‘ என பாபர் அஸாம் குறிப்பிட்டார் .

சுகாதார பாதுகாப்பு குமிழிக்குள் இருப்பது என்பது சிரமமான காரியம் எனக் குறிப்பிட்ட அவர் , அதற்கு எல்லோரும் பழக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார் .

‘ பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பது எனக்கு பெருமை தருகின்றது .

எனக்காக நான் நிர்ணயித்துக்கொண்டுள்ள இலக்குகளை அடைந்தவண்ணம் உள்ளேன் ‘ எனவும் பாபர் அஸாம் கூறினார் .

Design a site like this with WordPress.com
Get started