2021 – 2023ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது.

2021 – 2023ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது.

இதன்படி, எந்த அணிகள் எந்த அணிகளை சொந்த நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்திக்கப் போகின்றன என்கிற விபரம் வெளியாகியிருக்கிறது.

உலக கிண்ண டி20 தொடருக்கான தெரிவு போட்டியில் களமிறங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை

உலக கிண்ண டி20 தொடருக்கான தெரிவு போட்டியில் களமிறங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை

உலக டி20 கிண்ணத்திற்கு நேரடி தகுதியை இழந்த இலங்கை அணி தகுதிகான் சுற்றில் Group A பிரிவில் விளையாடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

ஆப்ஹானித்தான், மேற்கிந்திய தீவுகள் கூட நேரடி தகுதி பெற்ற நிலையில் இலங்கை அணியின் நிலை அவமானத்துக்குறியதாய் போனது.

திறமையான வீரர்களை பாகுபாடின்றி அணிக்கும் அழைத்து வாய்ப்பு கொடுத்திருந்தால், இலங்கை அணி பலமான அணியாகவே இருந்திருக்க கூடும்.

தற்போது இருக்கும் வீரர்களின் துடுப்பாட்டத்தில் பாரிய பின்னடைவு உள்ளதோடு, Slow Ball பந்துகளை அடித்தாடுவதில் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையிலும் உள்ளனர்.

2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்திற்க்கு தகுதி பெறுமா இலங்கை அணி

2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்திற்க்கு தகுதி பெறுமா இலங்கை அணி ?

2023ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு டெஸ்ச் சாம்பியன்ஷிப் போட்டிகளை போல ஒவ்வொரு அணியும் தான் விளையாடும் ஒருநாள் தொடர்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகிறது. இலங்கை அணி தான் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், குறைந்தது இன்னமும் 11 வெற்றிகளை பெற வேண்டியதாக இருக்கிறது.

இந்த வெற்றிகளை பெறமுடியாமல் போனால், இலங்கை அணி தகுதிகான் போட்டிகளில் இரண்டாம் நிலை அணிகளுடன் போட்டிபோட வேண்டிய நிலை ஏற்படும்.

இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்


1966-ம் ஆண்டுக்கு பிறகு நாக் அவுட் சுற்றில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வீழ்த்துவது இது முதல் நிகழ்வாகும்.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் லண்டனில் நேற்று நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது.

பரம எதிரிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி நின்றனர். கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு நழுவ விடுவதுமாக ஆட்டத்தின் முதல் பாதி சென்றது.

இரண்டாவது பாதியில் உள்ளூர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் ஆக்ரோஷமாக செயல்பட்ட இங்கிலாந்து அணியினர், ஜெர்மனியின் தடுப்பு கோட்டையை தகர்த்தனர்.

75-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக் கொடுத்த பந்தை இங்கிலாந்தின் ரஹீம் ஸ்டெர்லிங் கோலுக்குள் தள்ளிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்தார்.

ஜெர்மனி வீரர்கள் சுதாரித்து மீள்வதற்குள் 86-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் தலையால் முட்டி கோல் அடித்து எதிரணியை முற்றிலும் நிலைகுலைய வைத்தார்.

இறுதியில், இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

இன்று அதிகாலை நடந்த மற்றொரு போட்டியில் ஸ்வீடன், உக்ரைன் அணிகள் மோதின. முதல் பாதியின் 27வது நிமிடத்தில் உக்ரைன் அணி ஒரு கோல் அடித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 43வது நிமிடத்தில் ஸ்வீடன் அணி ஒரு கோல் அடித்தது. இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை என்பதால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அப்போதும் எந்த அணியும் கோல் போடவில்லை.

இதையடுத்து, கூடுதலாக 5 நிமிடம் அளிக்கப்பட்டது. ஆட்டத்தின் 121வது நிமிடத்தில் உக்ரைன் அணி மற்றொரு கோலை அடித்தது.

இறுதியில், உக்ரைன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்வீடனை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. 

இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட்

இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூட் கொவிட்-19 வைரஸிற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் விதத்தில் இலங்கை அணியின் வீரர்கள் நடந்து கொண்ட சம்பவம், கிரிக்கெட் போன்ற உயர்தரமான விளையாட்டு ஒன்றுக்கு மிகப் பெரிய ஆபத்து விளைவிக்க கூடிய ஒரு செயலாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கின்றார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே தாம் முதலாவதாக விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரினை 3-0 என மிகவும் மோசமாக பறிகொடுத்திருந்தது.

T20 தொடரினை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ICC) ஒருநாள் சுபர் லீக்கிற்காக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியுடன் விளையாவிருக்கின்றது.

இந்த ஒருநாள் தொடர் டர்ஹமில் ஆரம்பமாகவுள்ள சந்தர்ப்பத்தில் இந்த ஒருநாள் தொடருக்காக டர்ஹம் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் மற்றும் தனுஷ்க குணத்திலக்க ஆகிய மூன்று பேரும் கொவிட்-19 வைரஸ் பரவல் அச்சம் அதிகம் கொண்ட டர்ஹம் பிராந்தியத்தின் வீதிகளில் எந்தவித முகக் கவசங்களுமின்றி ஊர் சுற்றுவதனை வீடியோ காணொளிகளில் அவதானிக்க முடியுமாக இருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் இந்த நடத்தை கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பிற்காக போடப்பட்டிருக்கும் உயிரியல் பாதுகாப்பு வலயத்தினை மீறும் செயலாக கருதப்பட்டதுடன், குறித்த வீரர்கள் மூவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டு இலங்கை வரவழைக்கப்பட்டு இது தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

அதேநேரம், குறித்த வீரர்கள் கொவிட்-19 வைரஸிற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மீறி நடப்பது அணியின் ஏனைய வீரர்கள் மற்றும் எதிரணி வீரர்கள் என அனைவருக்கும் ஆபத்தினை உருவாக்கும் விடயமாகவும் பார்க்கப்படுகின்றது. எனவே, இந்த வீரர்களின் நடத்தை தொடர்பில் பேசியிருந்த இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் மார்க் வூட் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

”அவர்களிடம் இருந்து இவ்வாறான விடயம் ஒன்று வெளியானது பெரிதும் ஏமாற்றத்தினை தருகின்றது. அதேநேரம், அவர்கள் சிறந்தவீரர்கள் என்பதும் துரதிஷ்டவசமான ஒரு விடயம். எனினும், நாம் சில விடயங்களில் இரட்டைக்கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், சின்ன விடயங்கள் அனைத்தினையும் தரைமட்டமாக்கூடிய ஆற்றல் கொண்டவையாக இருக்கின்றன.”

அதேநேரம், மார்க் வூட் இலங்கை – இங்கிலாந்து தொடருக்கான கொவிட்-19 வைரஸ் பாதுகாப்பு உத்தியோகத்தர் தமக்கு வழங்கியிருந்த விதிமுறைகளை தமது அணி சரியாக அவதானித்து பின்பற்றுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

”டர்ஹமில் கொவிட் (வைரஸின் பாதிப்பு) அதிகமாக இருப்பதாக எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே, நாங்கள் பின்வாங்கியிருக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். எங்களுக்கு உணவகங்களுக்கோ, Coffee கடைகளுக்கோ அல்லது அது போன்ற வேறு இடங்களுக்கோ செல்லும் வாய்ப்பு தரப்பட்டிருக்கவில்லை. உண்மையினைச் சொல்லப்போனால் வெளியில் போய் இருப்பது போன்ற விடயங்களுக்கும் அனுமதி தரப்பட்டிருக்கவில்லை. எனவே, நாம் அதற்கு ஏற்றாற் போல் நடந்து கொண்டோம்.”

இதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணி அண்மைய போட்டிகளில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத விடயம் குறித்து பேசியிருந்த மார்க் வூட் ஏற்கனவே பெற்ற தொடர் தோல்விகளினை தவிர்ப்பதற்கு இலங்கை அணி கடுமையான போட்டித்தன்மையினை வெளிப்படுத்த எதிர்பார்க்கும் என கருதப்படுவதால் தாம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடரில் அவதானமாக இருக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

”அவர்கள் அண்மையில் அதாவது 2019ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் எம்மை தோற்கடித்திருந்தனர். குறித்த போட்டியில் நாமே வெற்றி பெறுவோம் என எதிர்பார்க்கப்பட்ட போதும் நாம் தோற்றுப்போனோம். எனவே, நாம் இங்கே விட்டுக்கொடுக்க முடியாது. அவர்கள் மூன்று போட்டிகளில் ஏற்கனவே தோற்றுவிட்டனர் எனவே அதனை சரி செய்து போட்டித்தன்மையாக இருக்க அவர்கள் முயற்சி செய்வார்கள். எனவே, அவ்வாறான விடயம் ஒன்றினை நான் எனது சொந்த மைதானத்தில் நடைபெறாமல் ஆக்குவதற்கு நான் முயல்வேன்.”

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் இன்று (29) செஸ்டர்-லே-ஸ்ரிட் மைதானத்தில் இன்று (29) ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியில் இன்று பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்கும் இலங்கை

தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்கும் இலங்கை

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று T20I போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவிய இலங்கை அணி, தவறுகளை திருத்திக்கொண்டு ஓருநாள் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளது.

குறித்த இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா, ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

“T20I தொடரில் தோல்வியடைந்த விதத்தை, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், அதில் கிடைத்த விடயங்களை வைத்து எவ்வாறு போட்டியொன்றை கொடுப்பது என்பது தொடர்பில் சிந்தித்து வருகின்றோம்.

இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடும், பந்துவீசும் மற்றும் களத்தடுப்பில் ஈடுபடும் விடயங்களை பார்க்கும் போது, எம்மைவிட மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்”

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் நிலையான அணியாக இருக்கும் இங்கிலாந்து அணியை, அனுபவம் குறைந்த இளம் அணியாக எதிர்கொள்ளும் போது, இவ்வாறான வித்தியாசங்கள் தோன்றும் எனவும், இருப்பினும் தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்க எதிர்பார்ப்பதாகவும் குசல் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

“T20I தொடரில் நாம் துடுப்பெடுத்தாடிய விதம் மோசமானது என்பதை உணரவேண்டும். குறித்த தவறினை ஏற்றுக்கொள்ள வேண்டும். துடுப்பாட்ட வீரர்களாக சிறப்பாக செயற்பட்டிருந்தால், சிறந்த போட்டியை கொடுக்க முடிந்திருக்கும்.

இந்த தொடரில் எம்மால் செய்த முடிந்தவையை சரியாக செய்ய வேண்டும். எனவே, நாம் துடுப்பெடுத்தாடும் விதத்தை நூறு சதவீதம் சரியாக செய்ய வேண்டும். குறிப்பாக போட்டிகள் அனைத்துக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இல்லை. பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு குறைவான காலப்பகுதியே உள்ளது. பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, உளவியல் ரீதியில் தயாராகினால் மாத்திரமே சிறப்பாக ஆடமுடியும்”

இதேவேளை, அனைத்துவகையான போட்டிகளில் விளையாடும் போதும், அனுபவம் மிக முக்கிய விடயம். தேர்வுக்குழுவினர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள போதும், அனுப வீரர்களை முழுமையாக ஒதுக்கிவிடவில்லை என குசல் பெரேரா குறிப்பிட்டார்.

“இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தேர்வுக்குழுவினர் எடுத்தனர். அவர்கள் அதனை நடைமுறைப்படுத்துகின்றனர். அனுபவ வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை என கூறவில்லை. காரணம், அனைத்துவகை போட்டிகளுக்கும் அனுபவம் என்பது மிக முக்கியமானது. எனவே, இதுதொடர்பில் தேர்வுக்குழுவினர் ஆராய்வர்” என்றார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்றைய தினம் (29) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யூரோ கோப்பை – ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்



ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது.


ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் பெட்ரி சுய கோல் அடித்தார். இதனால் குரோஷியாவுக்கு முதல் கோல் வந்தது. 


அதன்பின், ஆக்ரோஷமாக ஆடிய ஸ்பெயின் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது. அந்த அணியின் பாப்லோ சராபியா 38-வது நிமிடத்திலும், சீசர் 57-வது நிமிடத்திலும், பெர்ரன் டோரஸ் 76-வது நிமிடத்திலும் கோலடித்து முன்னிலை தேடிக் கொடுத்தனர்.


கடைசி 5 நிமிடத்தில் குரோஷியா 2 கோல்களை போட்டது. அந்த அணியின் மிஸ்லாவ் ஒர்சிச் 85-வது நிமிடத்திலும், மரியோ பாசாலிச் 90-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இதனால் இந்த ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இதையடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் அபாரமாக செயல்பட்ட ஸ்பெயின் வீரர்கள் அல்வரோ மோராடா 100-வது நிமிடத்திலும், மிகெல் 103-வது நிமிடத்திலும் கோலடித்தனர்.


இறுதியில் ஸ்பெயின் அணி 5-3 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது


இன்று அதிகாலை நடந்த மற்றொரு ஆட்டத்தில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் சுவிட்சர்லாந்து அணி 15-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. 


இரண்டாவது பாதியில் அதிரடியாக ஆடிய பிரான்ஸ் 57, 59 மற்றும் 75-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் சுவிட்சர்லாந்து 81 மற்றும் 90-வது நிமிடத்தில் தலா ஒரு கோல் அடித்தது.

இதனால் ஆட்டம் 3-3 என சமனிலை வகித்தது.


வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி கார்னார் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் சுவிட்சர்லாந்து அணி 5-4 என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று கங்குலி தெரிவித்தார்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் ஆனது தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவலை நேற்று மாலை பிசிசிஐ சார்பில் தலைவர் கங்குலி அறிவித்தார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்த முடியாததற்கான காரணத்தை மின்னஞ்சல் மூலம் பி.சி.சி.ஐ வெளியிட்டு உள்ளது. அதில் அவர்கள் குறிப்பிட்டதாவது : கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்னவென்று நாம் கடந்த சில மாதங்களாக பார்த்துள்ளோம்.

எனவே டி20 உலகக்கோப்பையை இங்கு நடத்தும் வாய்ப்பு நம்மை விட்டு செல்ல துவங்கியது. அதுமட்டுமின்றி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை தாக்கம் இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக தற்போது இந்தியாவில் நம்மால் டி20 உலக கோப்பை தொடரை நடத்த முடியாமல் சென்றுவிட்டது.

வீரர்களின் பாதுகாப்பு மற்றும் இந்தத் தொடரை சரியான முறையில் எந்தவித தடங்கலும் இன்றி நடத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே இத்தொடரை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்தை நாங்கள் கூட்டம் அமைத்து முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் இத்தொடரை நாங்கள் நடத்த முயற்சிகளை மேற்கொண்டாலும் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த தொடர் திட்டமிட்டபடி இங்கு நடத்த முடியாத காரணத்தினால் இந்த தொடரின் நன்மையை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த இடமாற்றத்தை முடிவு செய்துள்ளோம்.


இது எங்களை பொறுத்தவரை சரியான முடிவு தான் என்று பிசிசிஐ சார்பில் கூறப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று மைதானங்களில் இந்த டி20 உலக கோப்பை தொடர் ஆனது 30 போட்டிகளாக நடத்தப்படவுள்ளது. அக்டோபர் மாதம் 17ஆம் தேதி துவங்கி நவம்பர் 14ஆம் தேதி வரை இந்த தொடர் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தமது சுற்றுப்பயணத்தில் அங்கே முதலாவதாக நடைபெற்று முடிந்திருக்கும் T20 தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த தொடரில் மிகவும் மோசமாக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி, T20 போட்டிகளில் தமது நான்காவது தொடர் தோல்வியினைப் பதிவு செய்த நிலையில், இந்த தோல்விக்காக இலங்கை கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்களும் எழுந்திருந்தன.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வி குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

இதில் இலங்கை கிரிக்கெட் அணி, 1996ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத்தினை வென்ற போது இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த வீரரும், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவருமான ரொஷான் மஹாநாம தொடர் தோல்விகளுக்கு வீரர்களின் மனநிலையே காரணம் என தனது ட்விட்டர் கணக்கின் மூலம் குறிப்பிட்டிருந்தார்.

”அப்போதைய வீரர்களுக்கும், இப்போதைய வீரர்களுக்கும் பாரிய வித்தியாசங்கள் எதுவும் இல்லை. இது வீரர்களின் மனப்பாங்குடன் சம்பந்தப்பட்டிருக்கின்றது. உங்கள் நாட்டுக்காக நீங்கள் ஏதாவது செய்யும் போது, நாட்டின் பெருமையினை கருத்திற்கொள்ளாது செயற்படுவது கவலையினைத் தருகின்றது.”

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண நாயகர்களில் ஒருவரும் இலங்கை கிரிக்கெட் முன்னாள் அதிரடி துடுப்பாட்டவீரர்களில் ஒருவருமான சனத் ஜயசூரிய இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்பில் உடனடி நடவடிக்கைகளினை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் உணரப்பட்டிருப்பதாக கூறியிருக்கின்றார்.

”இலங்கை கிரிக்கெட்டிற்கு இது மிகவும் சோகமான நாள். நிலைமை மிகவும் மோசமாகியிருக்கின்றது. நாம் (எமது) கிரிக்கெட்டை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.”

சனத் ஜயசூரிய ஒரு பக்கம் இருக்க, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஜாம்பவனான குமார் சங்கக்கார இலங்கை கிரிக்கெட் அணி இலக்குகளை அடிப்படையாக வைத்து வீரர்களை தெரிவு செய்ய வேண்டும் என T20 தொடரின் போதான போட்டி வர்ணனையின் போது சுட்டிக்காட்டியிருந்தார்.

”T20 உலகக் கிண்ணம் எமது அண்மைய இலக்காக இருப்பதனால், அதில் யாரை முன்னிறுத்துவது என்பது தொடர்பில் கண்டறியப்பட வேண்டி இருக்கின்றது. இதன் பின்னரே உண்மையில் 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம். மற்றைய விடயம் என்னவெனில் இவர்கள் தான் சிறந்த வீரர்கள் என்றால்? (சிறந்த வீரர்களுக்குரிய) விளையாட்டையா அவர்கள் விளையாடுகின்றனர்?? இந்த விடயம் அவர்களை சர்வதேச கிரிக்கெட்டில் இருக்க வைத்து மாத்திரம் அல்ல உள்ளூர் முதல்தரப்போட்டிகளில் வைத்தும் மதிப்பிடப்பட வேண்டும்.”

இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ஹசான் திலகரட்னவும் இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்பில் கவலையடைந்திருப்பதாக தெரிவித்திருந்ததோடு, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நுட்பம் சார்ந்த விடயங்களில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் எனக் கூறியிருக்கின்றார்.

”கடந்த இரவில் நடந்த போட்டியினைப் பார்க்கும் போது எனது இதயம் கணத்துப் போய்விட்டது. ஆனால், இதற்காக வீரர்களையும், பயிற்றுவிப்பாளர்களையும், அணி நிர்வாகத்தினையும் குறை கூறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை. நாம் கிரிக்கெட்டின் திட்டம் சார்ந்த விடயங்களை தவிர்த்து, நுட்பம் சார்ந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதன்படி, பயிற்றுவிப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய தருணமாக இது காணப்படுகின்றது.”

இலங்கை கிரிக்கெட் அணி மோசமான முறையில் ஒருநாள் தொடரினை பறிகொடுத்த இந்த சந்தர்ப்பத்தில், இலங்கை கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அடுத்த கட்டமாக இலங்கை – இங்கிலாந்து அணிகள் பங்கெடுக்கும் ஒருநாள் தொடர் நாளை (29) டர்ஹமில் நடைபெறவிருக்கின்றது.

மூன்று போட்டிகள் கொண்ட குறித்த ஒருநாள் தொடர், சர்வதேச கிரிக்கெட் வாரியத்தினுடைய ஒருநாள் சுபர் லீக்கினுள் உள்ளடங்குகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள், அணியிலிருந்து இடைநிறுத்தம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள், அணியிலிருந்து இடைநிறுத்தம்..!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மூவரையும் உடனடியாக நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கொவிட் பரவலுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் குறித்த மூன்று வீரர்களும், சுகாதார உயிர்குமிழி நடைமுறையை மீறி, செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தெரிவிக்கின்றார்.

Design a site like this with WordPress.com
Get started