2ஆவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி
டி20 கிரிக்கெட்டிலிருந்து எப்போது ஓய்வு ? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லாசித் மலிங்கா
இந்திய தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 வீரர்கள்
இந்திய தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 வீரர்கள்
இந்திய தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் முதற்கட்ட குழாத்துக்கான 10 வீரர்கள், கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில், குறித்த வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் இணைக்கப்பட்டுள்ள இந்த 10 வீரர்களும், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தை நிராகரித்து வரும் 40 வீரர்களில், இல்லாத வீரர்கள் என பிரமோதய விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில், இலங்கை அணியின் அனுபவ வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் இந்த உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் இணைக்கப்படவில்லை. எனவே, இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இணைக்கப்படமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும், கொழும்பில் உள்ள சினமன் கார்டன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#தெரிவுசெய்யப்பட்டுள்ள_வீரர்கள்
அஷான் பிரியன்ஜன்
அசேல குணரத்ன
அஞ்செலோ பெரேரா
சந்துன் வீரகொடி
மிலிந்த சிறிவர்தன
டில்ஷான் முனவீர
சதுரங்க டி சில்வா
ரொஷேன் சில்வா
பிரபாத் ஜயசூரிய
லஹிரு மதுசங்க
எவெர்ற்றனின் முகாமையாளரான றஃபெயெல் பெனிட்டஸ்
இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான எவெர்ற்றன், தமது புதிய முகாமையாளராக றஃபெயெல் பெனிட்டஸை நியமித்துள்ளது.
மூன்றாண்டு ஒப்பந்தம் ஒன்றில் பெனிட்டஸ் கைச்சாத்திட்டுள்ளார்.
இறுதியாக இவ்வாண்டு ஜனவரி மாதம் வரையில் சீன சுப்பர் லீக் கழகமான டலியான் புரொஃபபிஷனலின் முகாமையாளராக பெனிட்டஸ் காணப்பட்டிருந்தார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள்

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023: இலங்கைக்கு 13 டெஸ்ட் போட்டிகள்
சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சியின்) உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயத்துக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருநாள், T20 கிரிக்கெட்களுக்கு இணையாக டெஸ்டை பிரபலப்படுத்தத் தீவிரமாக முயற்சி செய்துவந்த ஐசிசி, இறுதியில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரை அறிமுகம் செய்தது.
2019ஆம் ஆண்டு ஆரம்பமாகிய ஐ.சி.சியின் அங்குரார்ப்பண டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தூக்கியது.
இந்த நிலையில், தற்போது 2021-2023ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
டெஸ்ட் விளையாடும் 9 நாடுகளும் தலா 6 தொடர்களில் ஆட வேண்டும், ஒவ்வொரு அணியும் மூன்று முறை உள்நாட்டிலும், மூன்று முறை வெளிநாட்டிலும் விளையாடும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றிபெற்று அதிக புள்ளிகள் பெரும் முதல் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
கிக்கெட் உலகின் பிக் 3 என அழைக்கப்படுகின்ற இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர்களை தங்களுக்கு இடையே ஆட மற்ற அணிகளுகு 3 டெஸ்ட்கள் கொண்ட தொடர் அல்லது 2 டெஸ்ட்கள் கொண்ட தொடர்கள் வழங்கப்பட்டுள்ளமை எப்படி அந்த அணிகள் இறுதிக்கு முன்னேற முடியும் என்ற கேள்வி எழுகிறது.
இதனிடையே, இரண்டாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து 21 டெஸ்ட் போட்டிகளிலும், இந்தியா 19 டெஸ்ட் போட்டிகளிலும், அவுஸ்திரேலியா 18 டெஸ்ட் போட்டிகளிலும், தென்னாபிரிக்கா 15 போட்டிகளிலும் விளையாடவுள்ளன.
நடப்பு டெஸ்ட் உலக சம்பியனான நியூசிலாந்து அணி 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடும். மேற்கிந்திய தீவுகள், இலங்கை அணிகள் 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடும்.
அதேபோல, பாகிஸ்தான் அணி 14 டெஸ்ட் போட்டிகளில் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் விளையாடும். இதனிடையே, பங்களாதேஷ் அணிக்கு 6 தொடர்கள் இருந்தாலும் ஒரு தொடருக்கு 2 டெஸ்ட் போட்டிகள்தான் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
எதுஎவ்வாறாயினும், இந்தியா–இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான பட்டௌடி கிண்ணத்துக்கான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 4ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதன்மூலம் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது அத்தியாயம் ஆரம்பமாகுகின்றன.
இந்த நிலையில், இலங்கை அணி விளையாடவுள்ள டெஸ்ட் தொடர்கள் பற்றிய முழுமையான விபரங்களைப் பார்ப்போம்.
2021 டிசம்பர் – இலங்கை அணியின் பங்களாதேஷ் சுற்றுப்பயணம்
அட்டவணையின்படி, இலங்கை அணிக்கு முதல் தொடரே வெளிநாட்டு மண்ணில்தான். பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்று விளையாட உள்ளது.
2022 பெப்பரவரி – இலங்கை அணியின் இந்தியா சுற்றுப்பயணம்
பங்களாதேஷ் அணியுடனான டெஸ்ட் தொடர் நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியா செல்லவுள்ளது. இந்தத் தொடர் IPL தொடருக்கு முன் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஜுன் – அவுஸ்திரேலிய அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
அடுத்த வருடம் ஜுன் மாதம் அவுஸ்திரேலிய அணிக்கெதிராக சொந்த மண்ணில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடவுள்ளது.
2022 ஜுலை – பாகிஸ்தான் அணியின் இலங்கை சுற்றுப்பயணம்
ஜுலை மாதத்தில் பாகிஸ்தான் அணி, இலங்கை வந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடும்.
2022 ஒக்டோபர் – மேற்கிந்திய தீவுகளின் இலங்கை சுற்றுப்பயணம்
இதனைத் தொடர்ந்து ஒக்டோபர் – நவம்பர் மாதங்களில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடும். இலங்கை அணி தனது சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் கடைசி டெஸ்ட் தொடர் இதுவாகும்.
2022 நியூசிலாந்து – இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம்
கடைசியாக நியூசிலாந்து செல்லும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.
இதேவேளை, உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இரண்டாம் தொடருக்கான இறுதிப் போட்டி மற்றும் இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
IPL தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸி. வீரர்கள்.
IPL தொடருக்கு முன்னுரிமை கொடுக்கும் ஆஸி. வீரர்கள்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக்கின் மிகுதிப்போட்டிகளில், அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPL தொடர் எதிர்வரும் செப்டம்பர் 18ம் திகதி முதல் ஒக்டோபர் 15ம் திகதிகளுக்குள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் நிறைவடைந்த சில நாட்களில் ஐசிசி T20 உலகக் கிண்ணத் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பெட் கம்மின்ஸ், தேசிய அணிக்கான போட்டிகளிலிருந்து சற்று விடுமுறை பெற்றுள்ளார். எனவே, இவர் IPL தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான தொடர்களில் இருந்தும் சில வீரர்கள் வெளியேறியுள்ளனர்.
குறிப்பாக 20 வீரர்கள் அளவில் மேற்கிந்திய தீவுகள் தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டிருந்த போதும், அதிகமான வீரர்கள் மாற்று வீரர்காளகவே இணைக்கப்பட்டனர். இதில், கிளேன் மெக்ஸ்வேல், ஜெய் ரிச்சட்சன், கேன் ரிச்சட்சன், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் டேனியல் சேம்ஸ் ஆகியோர் விலகியிருந்தனர். இந்தநிலையில், இவர்களும் IPL தொடரில் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பத்தில், அவுஸ்திரேலிய அணியின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட அணிகளுக்கான தலைவர் ஆரோன் பின்ச், அணி வீரர்கள் தேசிய அணியின் போட்டிகளை கவனத்தில் கொள்ளாமல், IPL தொடரில் விளையாட எதிர்பார்ப்பதை விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருந்தார்.
எனினும், உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதால், அதற்கு முதலில் நடைபெறவுள்ள IPL தொடரில் விளையாடுவது அவுஸ்திரேலிய வீரர்களுக்கு மேலும் பலனை தரும் என்ற எண்ணம் தற்போது உருவாகியுள்ளது.
அத்துடன், இந்திய கிரிக்கெட் சபையானது, வெளிநாட்டு வீரர்களை அழைத்துவரும் செயற்பாட்டில் கடுமையாக உழைத்து வருகின்றது. அதற்காக அணிகளிடம் தொடர்ந்தும் கலந்துரையாடி வரும் இந்திய கிரிக்கெட் சபை, வெளிநாட்டு வீரர்களின் வருகையை உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களை அழைத்து வருவது தொடர்பிலும், இந்திய கிரிக்கெட் சபை மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் சபைகளிடம் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப 69 மில்லியன்கள் செலவு
இலங்கை வீரர்களை இங்கிலாந்துக்கு அனுப்ப 69 மில்லியன்கள் செலவு
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பிற்காக 69 மில்லியன் ரூபாய் செலவில் விசேட விமானத்தின் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்தியப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார்.
எனவே, வீரர்கள் அனைவரும் மிகப் பெரும் செலவில் பாதுகாப்பாக இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்ட போதிலும், ஒருசில வீரர்களின் நடத்தை குறித்து தான் வருத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி, இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில், குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகிய மூவரும் கொவிட்-19 பாதுகாப்பு வலயத்தின் விதிமுறைகளை மீறி இரவு நேரத்தில் வெளியே நடமாடியமை தொடர்பான காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
இதனையடுத்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை, குறித்த மூன்று வீரர்களுக்கும் எதிராக தற்காலிக போட்டித்தடை விதித்து அவர்களை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்களின் இந்த மோசமான செயல்பாடு குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் வைத்தியப் பிரிவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கருத்து தெரிவிக்கையில்,
“இங்கிலாந்தில் எமது வீரர்களுக்கு ஒருசில தளர்வுகள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தன. இதில் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகாமையில் ஒரு கால்வாய் ஒன்று உள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் காலை அல்லது மாலை வேளையில் அங்கு நடந்து செல்ல முடியும் என இங்கிலாந்து கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியிருந்தது.
அதேபோல, அங்குள்ள பாலத்தின் ஊடாக நடந்து சென்றால் பிரதான நகரத்துக்குள் செல்ல முடியும். இதில் இலங்கை அணி வீரர்களுக்கு வெளியில் சென்று உடற்பயிற்சிகளை மேற்கொள்ள அல்லது ஓய்வு நேரத்தைக் கழிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் இலங்கை கிரிக்கெட் அணியுடன் உடற்கூற்று நிபுணர் ஒருவர் மாத்திரம் இருந்தார். வைத்தியர் ஒருவர் அணியில் இருக்கவில்லை. தற்போது 24 மணித்தியாலமும் அணியுடன் வைத்தியர் ஒருவர் இருப்பார். இதில் குறித்த சம்பவம் நடந்த போது இலங்கை அணியின் வைத்தியர் எங்கே இருந்தார் என ஒருவர் என்னிடம் கேட்டார். அதற்கு வைத்தியர் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிவிட்டார்.
உண்மையில் அணியில் உள்ள வைத்தியரின் வேலை வீரர்கள் இரவு நேரத்தில் தூங்குவதைப் பார்ப்பது அல்ல. எனவே இவ்வாறான சூழ்நிலையில் வெளியே செல்ல முடியாது என்பதை வீரர்கள் நன்கு அறிவார்கள்.
அதேபோல, அவர்களை இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்க 69 மில்லியன் ரூபா பணத்தை இலங்கை கிரிக்கெட் சபை செலவிட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமானசேவையின் விசேட விமானத்தின் மூலம் இங்கிலாந்துக்கு அனுப்பிவைத்தோம்.
அதுமாத்திரமின்றி, இந்திய வீரர்களுக்கு முன் நாங்கள் எமது வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினோம். அதுதான் எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. நான் ஒருபோதும் வீரர்களை விமர்சிக்க மாட்டேன். நான் எப்போதும் வீரர்களுடன் அன்பான இருப்பேன்” என அவர் தெரிவித்தார்.
அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளதால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அணியில் பல மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளதால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அணியில் பல மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஏற்கனவே அணியில் இருந்து புஜாரா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கோலி மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு தகவலாக இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
மேலும் இது குறித்து கூறுகையில் : சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் தொடர்ந்து விளையாடினால் மீண்டும் காயம் அதிகரிக்கும். இதனால் நாங்கள் அவருக்கு இங்கிலாந்திலேயே முதல் கட்ட சிகிச்சை அளித்து பின்னர் இந்தியா அனுப்பி வைப்போம் என்பதுபோல அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
கில் இங்கிலாந்தில் முதற்கட்ட சிகிச்சையை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருடைய காயம் எங்கு ஏற்பட்டுள்ளது ? காயத்தின் தன்மை எப்படி உள்ளது ? என எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. கில் வெளியேற்றப்படும் வேளையில் ராகுல் அல்லது மாயங்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் அம்பயர். பணியில் இருந்து விலகிய பங்களாதேஷ் நடுவர் மோனிருஸ்சமான்
எனக்கு சுயமரியாதை தான் முக்கியம் அம்பயர். பணியில் இருந்து விலகிய பங்களாதேஷ் நடுவர் மோனிருஸ்சமான்
ஜென்டில்மேன் கேம் என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் தங்களது அதிகப்பிரசங்கி தனத்தையும், அருவருக்கத்தக்க செயல்களையும் வெளிப்படுத்தி அனைத்து நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி வருவதே பங்களாதேஷ் அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்களின் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் அந்நாட்டு நடுவர்களில் ஒருவரான மோனிருஸ்சமான் அந்த பணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இதற்கு அந்நாட்டு கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் இரு முன்னனி வீரர்களின் அருவருக்கத்தக்க செயல்கள்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
பங்களாதேஷின் உள்ளூர் தொடரான டாக்கா ப்ரீமியர் லீக் நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரின் ஒரு போட்டியின்போது கள நடுவர் விக்கெட் கொடுக்காததால், ஸ்டம்புகளை தனது காலால் எட்டி உதைத்து அதிர்ச்சியை ஏற்படுத்திய ஷாகிப் அல் ஹசான், அந்த போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த போது மழை வந்தவுடன் அனைத்து ஸ்டம்புகளையும் பிடுங்கி வீசி எறிந்ததும் பெரிதும் விமர்ச்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. அதனையடுத்து அவருக்கு அந்நாட்டு நாணய மதிப்பில் 5 இலட்சம் அபாரதமும், 3 போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது.
அதே தொடரின் மற்றொரு போட்டியில் கள நடுவர் விக்கெட் கொடுக்காததால் பிட்சிலேயே படுத்து உருண்ட மற்றொரு வீரரான மஹமதுல்லா, அந்த போட்டியை மேற்கொண்டு நடத்த விடாமல் பிட்சிலேயே படுத்துக்கொண்டார். இதனால் அவருக்கு 20,000 அபரதமாக விதிக்கப்பட்டது. இந்த இருவரின் செயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட மோனிருஸ்சமான், மன உளைச்சல் காரணமாக நடுவர் பணியில் இருந்து வாழ்நாள் முழவதுமாக விலகும் முடிவை எடுத்துள்ளார். இது பற்றி கூறிய அவர்,
இனிமேல் நான் எந்த போட்டிகளிலும் நடுவராக பணியாற்ற போவதில்லை. எனக்கென்று சுய மரியாதைகள் இருக்கின்றது. அதைவிட்டுவிட்டு இப்படி என்னால் வாழ இயலாது. நடுவர்கள் தவறு செய்தனர். அதை இல்லையென்று கூறவில்லை. ஆனால் அதற்காக அவர்களை இப்படி அசிங்கப்படுத்துவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த வீரர்கள் அப்படி நடந்து கொண்ட பிறகும் இந்த பணியை தொடர்ந்து செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. பணத்திற்காகவெல்லாம் என்னுடைய சுயமரியாதையை இழக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
நடுவர்களை கொச்சைப்படுத்திய ஷாகிப் மற்றும் மஹமதுல்லா ஆகியோரின் செயல்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. எனவே அவர்களுக்கு சர்வதேச தடை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உள்ளூர் போட்டிகளில் விளையாட தடை மற்றும் அபராதம் ஆகியவற்றை மட்டுமே அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.





