இரண்டு LPL அணிகளின் உரிமையாளர்கள் விலகல்

இரண்டு LPL அணிகளின் உரிமையாளர்கள் விலகல் லங்கா பிரீமியர் லீக் T20 (LPL) கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள கொழும்பு கிங்ஸ் மற்றும் தம்புள்ள வைகிங் ஆகிய அணிகளின் உரிமையாளர்கள் அணிகளுக்கான தமது உரிமத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து குறித்த இரண்டு அணிகளினதும் உரிமைத்துவம் இடைநிறுத்தப்படுவதாக போட்டிகளை நடத்தும் IPG நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாவது தடவையாக இவ்வருடம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடர் ஜுலை மாதம் 29ஆம் திகதி முதல் ஆகஸ்ட்Continue reading “இரண்டு LPL அணிகளின் உரிமையாளர்கள் விலகல்”

இலங்கை அணிக்கெதிரான தொடரை தவறவிடும் ஜோஸ் பட்லர்

இலங்கை அணிக்கெதிரான தொடரை தவறவிடும் ஜோஸ் பட்லர் இலங்கை அணியுடன் நடைபெறவுள்ள எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியுடன் கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற முதலாவது T20 போட்டியில் அரைச்சதம் கடந்து 68 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் அந்த அணியின் வெற்றிக்கும் முக்கிய காரணமாக இருந்தார். எனினும், குறித்த போட்டியின் போது அவரது வலதுகணுக் காலில் சிறிய காயமொன்று ஏற்பட்டுள்ளது.Continue reading “இலங்கை அணிக்கெதிரான தொடரை தவறவிடும் ஜோஸ் பட்லர்”

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறும் அவிஷ்க பெர்னாண்டோ

இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறும் அவிஷ்க பெர்னாண்டோ இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை உபாதை காரணமாக, இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ தவறவிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியானது, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் விளையாடி வருகின்றது. இதில், மூன்று T20I போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், தொடரை 3-0 என இலங்கை அணி இழந்துள்ளது. குறித்த இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம்Continue reading “இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரிலிருந்து வெளியேறும் அவிஷ்க பெர்னாண்டோ”

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக ஹேரத்

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக ஹேரத் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் நட்சத்திரமான ரங்கன ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவானான ஹேரத், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே அணியுடன் விளையாடவுள்ள கிரிக்கெட் தொடரில் இருந்து, தனது ஆலோசனைப் பணிகளை ஆரம்பிக்கவிருக்கின்றார். இதேநேரம், ரங்கன ஹேரத் இந்த ஆண்டு நடைபெறவிருக்கின்ற T20 உலகக் கிண்ணம் வரையில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின்Continue reading “பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து ஆலோசகராக ஹேரத்”

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் அன்ரே ரசல்

மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் அன்ரே ரசல் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதல் இரண்டு T20I போட்டிகளுக்கான மேற்கிந்திய தீவுகளின் 13 பேர் கொண்ட குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இந்த குழாத்தில், மேற்கிந்திய தீவுகளின் முன்னணி சகலதுறை வீரர்களில் ஒருவரான அன்ரே ரசல் இணைக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணி 2012 மற்றும் 2016ம் ஆண்டுகளில் T20I உலகக் கிண்ணத்தை வெற்றிக்கொண்ட குழாத்தில் விளையாடியிருந்தார். இந்தநிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் அன்ரே ரசல் மீண்டும்,Continue reading “மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இணையும் அன்ரே ரசல்”

2021 யூரோ கோப்பை கால்பந்து – டென்மார்க், இத்தாலி அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

யூரோ கோப்பை கால்பந்து – டென்மார்க், இத்தாலி அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் அணி, வேல்சை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் சக வீரர் டாம்ஸ் கார்டு தட்டிக்கொடுத்த பந்தை டென்மார்க்கின் கேஸ்பர் டோல்பெர்க் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார்.பிற்பாதியில் 48-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கடைசி கட்டத்தில் டென்மார்க்கின் ஜோகிம் மாலே 88-வது நிமிடத்திலும்,Continue reading “2021 யூரோ கோப்பை கால்பந்து – டென்மார்க், இத்தாலி அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்”

முதல் T20 தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

முதல் T20 தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கியது. இந்திய நேரப்படி நள்ளிரவு நடைபெற்ற முதல் 20 ஓவர் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில்Continue reading “முதல் T20 தென் ஆப்பிரிக்காவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்”

டி20 தொடரில் இலங்கையை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து

டி20 தொடரில் இலங்கையை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி சவுத்தம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோவ் மற்றும் மலன் சிறப்பான தொடக்கம்Continue reading “டி20 தொடரில் இலங்கையை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது இங்கிலாந்து”

Design a site like this with WordPress.com
Get started