விளையாட்டுத் துறைக்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம்

விளையாட்டுத் துறைக்காக சிறப்பு புலனாய்வுப் பிரிவு நியமனம் நாட்டின் விளையாட்டுத் துறையில் நீண்டகாலமாக உள்ள தவறான நடத்தைகளை தடுக்கும் நோக்கில் இளைஞர் மற்றம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ , சிறப்பு புலனாய்வுப் பிரிவொன்றை நியமித்துள்ளார் . இந்த பிரிவு , விளையாட்டில் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு , போட்டி நிர்ணயம் மற்றும் ஊழல் போன்றவற்றை கண்காணிக்கும் .

இலங்கை கிரிக்கெட் அணி குறித்து மிக்கி ஆர்தர் விரிவாக ஆராய வேண்டும் என்கிறார் சங்கக்கார

இலங்கை கிரிக்கெட் அணி குறித்து மிக்கி ஆர்தர் விரிவாக ஆராய வேண்டும் என்கிறார் சங்கக்கார இலங்கை கிரிக்கெட் அணி குறித்து விரிவாக ஆராய வேண்டிய நிலை தலைமை பயிற்றுநரான மிக்கி ஆர்தருக்கு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்தார். இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றதன் பின்னர் அவர் இதனைக் கூறினார். 2019 ஆம் ஆண்டு தசுன் சானக்க தலைமையில் பாகிஸ்தானில் இடம்பெற்றContinue reading “இலங்கை கிரிக்கெட் அணி குறித்து மிக்கி ஆர்தர் விரிவாக ஆராய வேண்டும் என்கிறார் சங்கக்கார”

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை: செரீனா வில்லியம்ஸ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை: செரீனா வில்லியம்ஸ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தாம் ஒலிம்பிக் பட்டியலில் இல்லையெனவும் அது தமக்குத் தெரியாத நிலையில், தாம் அதில் கலந்துகொள்வது முறையற்றது எனவும் அவர் கூறியுள்ளார். அவரது முடிவு குறித்து விபரமாக வினவ முற்பட்ட போது, அது குறித்து பேச செரீனா வில்லியம்ஸ் விரும்பவில்லையென சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. போட்டி விதிமுறைகளுக்கு அமைய, தமது 3Continue reading “டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லை: செரீனா வில்லியம்ஸ்”

டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ்: ஃபேபியோ குவார்டாரோ முதலிடம்!

டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ்: ஃபேபியோ குவார்டாரோ முதலிடம்! டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயத்தில், யமஹா அணியின் வீரரான ஃபேபியோ குவார்டாரோ முதலிடம் பிடித்துள்ளார். இளசுகளின் விருப்ப விளையாட்டாக இரசிக்கப்படும் மோட்டோ ஜிபி பந்தயம், ஆண்டுக்கு 19 சுற்றுகளாக பல்வேறு நாடுகளில் நடைபெறும். அந்த வகையில் ஆண்டின் ஒன்பதாவது சுற்றான டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம், நேற்று டிடி எஸ்சென் சர்வதேச ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் பந்தய தூரத்தை நோக்கி, 21 வீரர்கள் மோட்டார்Continue reading “டச் டிடி கிராண்ட் பிரிக்ஸ்: ஃபேபியோ குவார்டாரோ முதலிடம்!”

இலங்கை – இங்கிலாந்து தொடரின் போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19

இலங்கை – இங்கிலாந்து தொடரின் போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19 இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான T20I தொடருக்கு போட்டி மத்தியஸ்தராக செயற்பட்ட, பில் விட்டிகேஸிற்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று T20I போட்டிகளுக்கும், போட்டி மத்தியஸ்தராக பில் விட்டிகேஸ் செயற்பட்டிருந்தார். எனினும், தற்போது அறிகுறியற்ற கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் 10 நாட்கள் தனிமைப்படத்தப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டள்ள போதும்,Continue reading “இலங்கை – இங்கிலாந்து தொடரின் போட்டி மத்தியஸ்தருக்கு கொவிட்-19”

நடப்புச் சம்பியனை வீழ்த்திய பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு காலிறுதியில்

நடப்புச் சம்பியனை வீழ்த்திய பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு காலிறுதியில் யூரோ 2020 கால்பந்து தொடரில் தோல்வி காணாத டென்மார்க்கை வீழ்த்திய செக் குடியரசும், விறுவிறுப்பான போட்டியில் நடப்புச் சம்பியன் போர்த்துக்கல் அணியை வீழ்த்திய பெல்ஜியமும் தொடரின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. குறித்த இரண்டு போட்டிகளினதும் விபரம் கீழே. #நெதர்லாந்து எதிர் #செக்_குடியரசு ஹங்கேரி தலைநகர் படபெஸ்டில் உள்ள Puskás அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற 16 அணிகள் சுற்றுக்கான இந்தப் போட்டியில், லீக் சுற்றில் C குழுவில்Continue reading “நடப்புச் சம்பியனை வீழ்த்திய பெல்ஜியம் மற்றும் செக் குடியரசு காலிறுதியில்”

அநாகரீகமாக நடந்துகொண்ட குசல், நிரோஷன் திக்வெல்ல, கிரிக்கெட் சபை அதிரடித் தீர்மானம்..!

அநாகரீகமாக நடந்துகொண்ட குசல், நிரோஷன் திக்வெல்ல, கிரிக்கெட் சபை அதிரடித் தீர்மானம்..! இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை உடனடியாக நாட்டிற்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி, இருபதுக்கு-20 தொடரின் மூன்று போட்டிகளிலும் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த விடயம் இலங்கை கிரிகெட் ரசிகர்களை மிகுந்த கவலைக்கும், கோபத்துக்கும் உள்ளாகியுள்ள நிலையில், இலங்கைContinue reading “அநாகரீகமாக நடந்துகொண்ட குசல், நிரோஷன் திக்வெல்ல, கிரிக்கெட் சபை அதிரடித் தீர்மானம்..!”

டோக்கியோ ஒலிம்பிக் ; இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்

டோக்கியோ ஒலிம்பிக் ; இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல் கொவிட் -19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் , ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது . தற்போது அனைத்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு புறப்படுவதற்கு நான்கு நாள் காலகட்டத்தில் இரண்டு முறை கொரோனா வைரஸ்Continue reading “டோக்கியோ ஒலிம்பிக் ; இலங்கை உட்பட ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்”

ரொமேலுவின் பெல்ஜியமும் ரொனால்டோவின் போர்த்துக்கல்லும் இன்று பலப்பரீட்சை

ரொமேலுவின் பெல்ஜியமும் ரொனால்டோவின் போர்த்துக்கல்லும் இன்று பலப்பரீட்சை ஐரோப்பிய கால்பந்தாட்ட அரங்கில் அதிபலம்வாய்ந்த அணிகளாக வருணிக்கப்படும் பெல்ஜியமும் போர்த்துக்கலும் இன்று நடைபெறவுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் நொக் அவுட் போட்டியில் மோதவுள்ளன . அத்துடன் சமபலம் வாய்ந்த நெதர்லாந்தும் செக் குடியரசும் மற்றொரு நொக் அவுட் போட்டியில் இன்று சந்திக்கவுள்ளன . பெல்ஜியத்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையிலான போட்டி ஐரோப்பாவின் அதி சிறந்த வீரர்களும் இந்த இரண்டு அணிகளதும் தலைவர்களுமான லூக்காக்கு ரொமேலுவுக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் இடையிலான போட்டியாகவும்Continue reading “ரொமேலுவின் பெல்ஜியமும் ரொனால்டோவின் போர்த்துக்கல்லும் இன்று பலப்பரீட்சை”

இங்கிலாந்துடனான தொடர் இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராவதற்கு உதவும் – பாபர் அஸாம்

இங்கிலாந்துடனான தொடர் இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராவதற்கு உதவும் – பாபர் அஸாம் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணப் போட்டிக்கு தங்களைத் தயார்படுத்துவதற்கு இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் பெரிதும் உதவும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் பாபர் அஸாம் தெரிவித்துள்ளார் . இங்கிலாந்தை பாகிஸ்தான் அணி சென்றடைந்து டார்பியில் 3 நாள் தனிமைப்படுத்தலை ஆரம்பிக்கத் தயாரானபோது பாபர் அஸாம் இதனைத் தெரிவித்தார் . இங்கிலாந்தை சென்றடைந்த பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்றுநர்Continue reading “இங்கிலாந்துடனான தொடர் இருபது 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராவதற்கு உதவும் – பாபர் அஸாம்”

Design a site like this with WordPress.com
Get started