2021 – 2023ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது.

2021 – 2023ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணை வெளியாகி இருக்கிறது. இதன்படி, எந்த அணிகள் எந்த அணிகளை சொந்த நாட்டிலும், வெளிநாட்டிலும் சந்திக்கப் போகின்றன என்கிற விபரம் வெளியாகியிருக்கிறது.

உலக கிண்ண டி20 தொடருக்கான தெரிவு போட்டியில் களமிறங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை

உலக கிண்ண டி20 தொடருக்கான தெரிவு போட்டியில் களமிறங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை உலக டி20 கிண்ணத்திற்கு நேரடி தகுதியை இழந்த இலங்கை அணி தகுதிகான் சுற்றில் Group A பிரிவில் விளையாடும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. ஆப்ஹானித்தான், மேற்கிந்திய தீவுகள் கூட நேரடி தகுதி பெற்ற நிலையில் இலங்கை அணியின் நிலை அவமானத்துக்குறியதாய் போனது. திறமையான வீரர்களை பாகுபாடின்றி அணிக்கும் அழைத்து வாய்ப்பு கொடுத்திருந்தால், இலங்கை அணி பலமான அணியாகவே இருந்திருக்க கூடும். தற்போது இருக்கும் வீரர்களின்Continue reading “உலக கிண்ண டி20 தொடருக்கான தெரிவு போட்டியில் களமிறங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட இலங்கை”

2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்திற்க்கு தகுதி பெறுமா இலங்கை அணி

2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்திற்க்கு தகுதி பெறுமா இலங்கை அணி ? 2023ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு டெஸ்ச் சாம்பியன்ஷிப் போட்டிகளை போல ஒவ்வொரு அணியும் தான் விளையாடும் ஒருநாள் தொடர்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகிறது. இலங்கை அணி தான் இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், குறைந்தது இன்னமும் 11 வெற்றிகளை பெற வேண்டியதாக இருக்கிறது. இந்த வெற்றிகளை பெறமுடியாமல் போனால், இலங்கை அணி தகுதிகான் போட்டிகளில் இரண்டாம்Continue reading “2023ம் ஆண்டு ஒருநாள் உலகக்கிண்ணத்திற்க்கு தகுதி பெறுமா இலங்கை அணி”

இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம் 1966-ம் ஆண்டுக்கு பிறகு நாக் அவுட் சுற்றில் ஜெர்மனியை இங்கிலாந்து அணி வீழ்த்துவது இது முதல் நிகழ்வாகும். ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் லண்டனில் நேற்று நடந்த 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. பரம எதிரிகள் மோதிய இந்த ஆட்டத்தில் இரு அணியினரும் நீயா-நானா என்று வரிந்து கட்டி நின்றனர். கோல் கம்பத்தை நெருங்குவதும் பிறகு நழுவ விடுவதுமாக ஆட்டத்தின் முதல் பாதி சென்றது. இரண்டாவதுContinue reading “இங்கிலாந்து, உக்ரைன் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்”

இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட்

இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான மார்க் வூட் கொவிட்-19 வைரஸிற்கான பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் விதத்தில் இலங்கை அணியின் வீரர்கள் நடந்து கொண்ட சம்பவம், கிரிக்கெட் போன்ற உயர்தரமான விளையாட்டு ஒன்றுக்கு மிகப் பெரிய ஆபத்து விளைவிக்க கூடிய ஒரு செயலாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கின்றார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கே தாம் முதலாவதாக விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட T20Continue reading “இலங்கையின் செயல் ஒரு நினைவூட்டலாக அமைகின்றது – மார்க் வூட்”

தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்கும் இலங்கை

தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்கும் இலங்கை இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று T20I போட்டிகளிலும் மோசமான தோல்வியை தழுவிய இலங்கை அணி, தவறுகளை திருத்திக்கொண்டு ஓருநாள் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளது. குறித்த இந்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் பெரேரா, ஒருநாள் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். “T20I தொடரில் தோல்வியடைந்த விதத்தை, எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், அதில் கிடைத்த விடயங்களை வைத்து எவ்வாறு போட்டியொன்றை கொடுப்பது என்பதுContinue reading “தவறுகளை திருத்திக்கொண்டு ஒருநாள் தொடரில் களமிறங்கும் இலங்கை”

யூரோ கோப்பை – ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் கோபன்ஹேகன் நகரில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, குரோஷியாவை எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் 20-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீரர் பெட்ரி சுய கோல் அடித்தார். இதனால் குரோஷியாவுக்கு முதல் கோல் வந்தது.  அதன்பின், ஆக்ரோஷமாக ஆடிய ஸ்பெயின் அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது. அந்த அணியின் பாப்லோ சராபியா 38-வது நிமிடத்திலும், சீசர் 57-வது நிமிடத்திலும், பெர்ரன் டோரஸ் 76-வதுContinue reading “யூரோ கோப்பை – ஸ்பெயின், சுவிட்சர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்”

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று கங்குலி தெரிவித்தார்.

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த ஏழாவது டி20 உலக கோப்பை தொடர் ஆனது தற்போது இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவலை நேற்று மாலை பிசிசிஐ சார்பில் தலைவர் கங்குலி அறிவித்தார். இந்த டி20 உலகக்கோப்பை தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் இந்தியாவில் இந்த டி20 உலகக் கோப்பை தொடரை நடத்த முடியாததற்கான காரணத்தை மின்னஞ்சல் மூலம் பி.சி.சி.ஐContinue reading “20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று கங்குலி தெரிவித்தார்.”

கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்

கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி தமது சுற்றுப்பயணத்தில் அங்கே முதலாவதாக நடைபெற்று முடிந்திருக்கும் T20 தொடரில் 3-0 என வைட்வொஷ் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த தொடரில் மிகவும் மோசமாக செயற்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி, T20 போட்டிகளில் தமது நான்காவது தொடர் தோல்வியினைப் பதிவு செய்த நிலையில், இந்த தோல்விக்காக இலங்கை கிரிக்கெட் அணி மீது கடும் விமர்சனங்களும் எழுந்திருந்தன. அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் தொடர் தோல்வி குறித்துContinue reading “கவலைகொள்ளும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்”

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள், அணியிலிருந்து இடைநிறுத்தம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள், அணியிலிருந்து இடைநிறுத்தம்..! இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த மூவரையும் உடனடியாக நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.Continue reading “இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள், அணியிலிருந்து இடைநிறுத்தம்..!”

Design a site like this with WordPress.com
Get started