இந்திய தொடருக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள 10 வீரர்கள்
இந்திய தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் முதற்கட்ட குழாத்துக்கான 10 வீரர்கள், கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான இலங்கை முதற்கட்ட குழாத்தில், குறித்த வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக, தேர்வுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் இணைக்கப்பட்டுள்ள இந்த 10 வீரர்களும், வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தை நிராகரித்து வரும் 40 வீரர்களில், இல்லாத வீரர்கள் என பிரமோதய விக்ரமசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதில், இலங்கை அணியின் அனுபவ வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோர் இந்த உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் இணைக்கப்படவில்லை. எனவே, இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இணைக்கப்படமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், உயிரியல் பாதுகாப்பு வளையத்தில் உள்வாங்கப்பட்டுள்ள வீரர்கள் அனைவரும், கொழும்பில் உள்ள சினமன் கார்டன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#தெரிவுசெய்யப்பட்டுள்ள_வீரர்கள்
அஷான் பிரியன்ஜன்
அசேல குணரத்ன
அஞ்செலோ பெரேரா
சந்துன் வீரகொடி
மிலிந்த சிறிவர்தன
டில்ஷான் முனவீர
சதுரங்க டி சில்வா
ரொஷேன் சில்வா
பிரபாத் ஜயசூரிய
லஹிரு மதுசங்க
