அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ளதால் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அணியில் பல மாற்றங்களை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஏற்கனவே அணியில் இருந்து புஜாரா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக கோலி மூன்றாவது இடத்தில் விளையாடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு தகவலாக இந்திய அணியின் இளம் துவக்க வீரரான சுப்மன் கில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என்று தெரிகிறது.
மேலும் இது குறித்து கூறுகையில் : சுப்மன் கில்லுக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் தொடர்ந்து விளையாடினால் மீண்டும் காயம் அதிகரிக்கும். இதனால் நாங்கள் அவருக்கு இங்கிலாந்திலேயே முதல் கட்ட சிகிச்சை அளித்து பின்னர் இந்தியா அனுப்பி வைப்போம் என்பதுபோல அணி நிர்வாகத்திடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
கில் இங்கிலாந்தில் முதற்கட்ட சிகிச்சையை முடித்துக்கொண்டு இந்தியா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருடைய காயம் எங்கு ஏற்பட்டுள்ளது ? காயத்தின் தன்மை எப்படி உள்ளது ? என எந்த விவரமும் இதுவரை வெளியாகவில்லை. கில் வெளியேற்றப்படும் வேளையில் ராகுல் அல்லது மாயங்க் அகர்வால் ஆகிய இருவரில் ஒருவர் ரோகித் சர்மாவுடன் துவக்க வீரராக களம் இறங்குவார்கள் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
