இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள், அணியிலிருந்து இடைநிறுத்தம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் மூன்று வீரர்கள், அணியிலிருந்து இடைநிறுத்தம்..!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான குசல் மென்டீஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்குவரும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் மொஹன் டி சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மூவரையும் உடனடியாக நாட்டிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழுக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

கொவிட் பரவலுக்கு மத்தியில் இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் குறித்த மூன்று வீரர்களும், சுகாதார உயிர்குமிழி நடைமுறையை மீறி, செயற்பட்ட குற்றச்சாட்டிலேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் செயலாளர் தெரிவிக்கின்றார்.

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started