ரொமேலுவின் பெல்ஜியமும் ரொனால்டோவின் போர்த்துக்கல்லும் இன்று பலப்பரீட்சை
ஐரோப்பிய கால்பந்தாட்ட அரங்கில் அதிபலம்வாய்ந்த அணிகளாக வருணிக்கப்படும் பெல்ஜியமும் போர்த்துக்கலும் இன்று நடைபெறவுள்ள ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் நொக் அவுட் போட்டியில் மோதவுள்ளன .
அத்துடன் சமபலம் வாய்ந்த நெதர்லாந்தும் செக் குடியரசும் மற்றொரு நொக் அவுட் போட்டியில் இன்று சந்திக்கவுள்ளன .
பெல்ஜியத்துக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையிலான போட்டி ஐரோப்பாவின் அதி சிறந்த வீரர்களும் இந்த இரண்டு அணிகளதும் தலைவர்களுமான லூக்காக்கு ரொமேலுவுக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கும் இடையிலான போட்டியாகவும் அமையும் என்று கூறினால் மிகையாகாது .
உள்ள 10 ர் கால்பந்தாட்ட அரங்கில் ( இத்தாலி செரி ஏ ) எதிரெதிர் அணிகளில் சந்தித்துவந்துள்ள இவர்கள் இருவரும் இன்றைய தினம் சர்வதேச அரங்கில் தங்களுக்கு இடையிலான போட்டித்தன்மையை பரீட்சிக்கவுள்ளனர் .
நடப்பு ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் 5 கோல்களுடன் அதிக கோல்களை ரொனால்டோ போட்டுள்ளதுடன் ரொமேலு 3 கோல்களைப் போட்டுள்ளார் .
இன்றைய போட்டியில் ரொனால்டோ மேலும் ஒரு கோலை போட்டால் சர்வதேச அரங்கில் அதிக கோல்கள் போட்டவருக்கான சாதனைக்கு சொந்தக்காரராவார் .
ஈரானின் முன்னாள் வீரர் அலி தாய் போட்டுள்ள 109 கோல்களை ரோனால்டோ கடந்த போட்டியில் 2 கோல்களைப் போட்டதன் மூலம் சமப்படுத்தியிருந்தார் .
கடந்த செரி ஏ பருவகாலத்தில் ஜுவென்டஸ் அணிக்காக ரொனால்டோ 29 கோல்களைப் போட்டு தங்கப் பாதணிக்கு சொந்தக்காரரானார் .
ரொனால்டோவைவிட 5 கோல்கள் குறைவாக போட்டிருந்த ரொமேலு , செரி ஏ போட்டியில் இன்டர் மிலான் அணியை சம்பியனாக்கியதால் அதி சிறந்த வீரரு h க்கான விருதை தனதாக்கிக்கொண்டிருந்தார் .
இவர்கள் இருவரினதும் தலமையிலான அணிகளில் மிகச் சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் இடம்பெறுவதால் நடுநிலையான செவில் , டி லா கார்ட்டூயா விளையாட்டரங்கில் நடைபெறும் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய போட்டி கடைசிவரை வேகமும் விறுவிறுப்பும் கலந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .
#நெதர்லாந்து எதிர் #செக்_குடியரசு
நெதர்லாந்துக்கும் செக் குடியரசுக்கும் இடையிலான நொக் அவுட் போட்டி நடுநிலையான புடாபெஸ்ட் , பெரென்க் புஸ்காஸ் விளையாட்டரங்கில் இன்று நடைபெறவுள்ளது .
இந்த இரண்டு அணிகளில் லீக் சுற்றில் சகல போட்டிகளிலும் வெற்றியீட்டிய நெதர்லாந்து இன்றைய போட்டியில் வெற்றிபெறக்கூடிய அனுகூலமான அணியாகத் தென்படுகின்றது .
எனினும் செக் குடியரசை குறைத்து மதிப்பிட முடியாது .
இந்த இரண்டு அணிகளும் கடைசியாக ஐரோப்பிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தகுதிகாண் சுற்றுகளில் சந்தித்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் செக் குடியரசே வெற்றிபெற்றிருந்தது .
எனவே இன்றைய போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற நிலைப்பாடே காணப்படுகின்றது .
